No results found

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில், ரூ.6.39 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குந்துமாரனப்பள்ளி ஒன்றியத்தில் 30 லட்சத்தில் ஊராட்சி. ஒன்றிய துவக்கப்பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள் ரூ.5.32 லட்சத்தில் சமையலறை கட்டுமான பணிகள், டி.தாமந்தரபள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் மறுசீரமைப்பு பணிகள், கெல மங்கலத்தில், ரூ.3.10 கோடி மதிப்பில் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள், அனுசோனையில் ரூ.30.25 லட்சத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    மேலும், கெலமங்கலம் ஒன்றியம், வரகனப்பள்ளியில் ருக்குமணி என்பவரின் வீட்டில் ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமான பணி, நீலகிரி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மறுசீரமைப்பு பணிகள், திம்ஜேப்பள்ளி ஊராட்சி, உள்ளுக்குறுக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ.5.07 லட்சம் மதிப்பில் சமையலறை கட்டுமான பணிகள் என ரூ.6 கோடியே 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்ட பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் மாது, பிடி.ஓ.,க்கள் பயாஸ், சாந்த லட்சுமி, உதவி பொறியா ளர்கள் முருகேசன், தமிழ், ஊராட்சி மன்ற தலைவர் முரளி, சுஜாதா மாரப்பா, கிருஷ்ண மூர்த்தி, மணிவண்ணன், சம்பங்கி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال